தேன்கனிக்கோட்டை வனச்சரகம்சாமி ஏரியில் குளியல் போட்ட காட்டு யானை


தேன்கனிக்கோட்டை வனச்சரகம்சாமி ஏரியில் குளியல் போட்ட காட்டு யானை
x
தினத்தந்தி 12 April 2023 12:30 AM IST (Updated: 12 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகம் நொகனூர், அய்யூர் வனப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. விவசாயிகள், வனத்துறையினர் யானைகளை பட்டாசு வெடித்து விரட்டி வருகின்றனர். அதில் ஒரு சில யானைகள் தனியாக பிரிந்து தினமும் உணவு, தண்ணீர் தேடி பெட்டமுகிளாலம் அய்யூர் சாலையிலும், தேன்கனிக்கோட்டை சாலையில் சுற்றி வாகனங்களை மறித்து வருகின்றன. அதில் கிரி என்ற 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை வயது முதிர்வு காரணமாக நொகனூர் காட்டில் முகாமிட்டு அவ்வப்போது தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் வாகனங்களை வழி மறித்து வந்தது.

தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டி வந்த நிலையில் கிரி யானை உணவு தேடி இடம் பெயர்ந்து அய்யூர் வனப்பகுதியில் உள்ள சாமி ஏரியில் நேற்று மதியம் தண்ணீர் குடித்து நீண்ட நேரம் கரையோரம் நின்று கொண்டிருந்தது. பின்னர் வெயில் தாங்க முடியாமல் தண்ணீரில் இறங்கி நீண்ட நேரம் ஆனந்த குழியல் போட்டது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் யானையை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Next Story