தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்; கொள்ளு பயிர் சேதம்
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள், கொள்ளு பயிரை சேதப்படுத்தின.
தாளவாடி
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள், கொள்ளு பயிரை சேதப்படுத்தின.
கொள்ளு பயிர்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள விலங்குகள் குறிப்பாக யானை, உணவு தண்ணீர் தேடி அடிக்கடி அருகே உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது. இது தொடர் கதையாகி வருகிறது.
ஜுர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட தாளவாடி அருகே உள்ள மல்லன்குழி கிராமத்தை சேர்ந்தவர் சிவம்மா (வயது 42). விவசாயி. இவருக்கு ஊரையொட்டி 3 ஏக்கர் பரப்பளவிலான தோட்டம் உள்ளது. இங்கு அவர் 2 ஏக்கர் பரப்பளவில் கொள்ளு பயிர் சாகுபடி செய்துள்ளார்.
சேதப்படுத்திய யானைகள்
இந்த நிலையில் சிவம்மா நேற்று காலை தனது தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு கொள்ளு பயிர் நாசப்படுத்தப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார்.
நேற்று முன்தினம் இரவு ஜுர்கள்ளி வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறின. பின்னர் அவை சிவம்மாவின் தோட்டத்துக்குள் புகுந்துள்ளது. அதன்பின்னர் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த கொள்ளு பயிரை தின்றும், மிதித்தும் சேதப்படுத்திவிட்டு் சென்றுள்ளது தெரியவந்தது. இதில் 2 ஏக்கர் பரப்பளவுள்ள கொள்ளு பயிர் சேதமானது. இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் அங்கு சென்று சேதமடைந்த பயிரை பார்வையிட்டனர். அப்போது விவசாயிகள் அவர்களிடம் கூறும்போது, 'யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும், சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.