தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமையை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வித்தரத்தை முற்றிலும் பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும், பள்ளி மேலாண்மை குழுவை 3 மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே கூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி முன்னிலை வகித்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில செயலாளர் ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் கனகராஜ், ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் மணிமேகலை ஆகியோர் பேசினர். இதில் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட பொருளாளர் அருள்ராஜா நன்றி கூறினார்.


Related Tags :
Next Story