மின்னொளி கபடி போட்டி
சாத்தான்குளம் அருகே மின்னொளி கபடி போட்டி நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை புதுக்கினறு கிராமத்தில் ராகவா ஸ்போட்ஸ் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான 2-ம் ஆண்டு மின்னொளி கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், தூத்துக்குடி, நெல்லை, புதுக்கிணறு, திசையன்விளை, உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன. போட்டியை சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் ஜோசப் தொடங்கி வைத்தார். இறுதி போட்டியில் புதுக்கிணறு ராகவா ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை எதிர்த்து தூத்துக்குடி அணி எதிர் கொண்டதில் தூத்துக்குடி அணி வென்று முதல் பரிசை தட்டிச்சென்றது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் முதலிடம் பிடித்த தூத்துக்குடி அணிக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சார்பில் ரூ.20 ஆயிரம் மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. 2-ம் இடம் பிடித்த புதுக்கிணறு அணிக்கு அரசு ஒப்பந்தகாரர் மலையாண்டி பிரபு ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பையையும், 3-வது இடம் பிடித்த நெல்லை அணிக்கு முதலூர் பஞ்சாயத்து தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன்முருகேசன் ரூ.10 ஆயிரமும் வழங்கினார். 4-வது இடம் பிடித்த மெஞ்ஞானபுரம் அணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஆறுமுகநயினார் ரூ.10 ஆயிரம் வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு ஒப்பந்ததாரர் மனோகரன், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி சரவணன், நகர துணை செயலர் மணிகண்டன், மேலவை பிரதிநிதி முருகன், 5-வது வார்டு செயலர் அம்புரோஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ராகவா ஸ்போர்ட்ஸ் கிளப் ஒருங்கிணைப்பாளர் பாண்டித்துரை மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.