நாகர்கோவிலில் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி மின்வாரிய ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கன்னியாகுமரி
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி மின்வாரிய ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மின் வினியோக வட்ட தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் வாரியத்தில் காலியாக உள்ள 58,000 காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
கூட்டுக்குழு தலைவர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் குமார், ராஜ் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story