மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் பாளையங்கோட்டை தியாகராஜநகர் மின்சார வாரிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திட்டத் தலைவர் பீர்முகமது ஷா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
மின்சார வாரியத்தில் கேங்மேன் பணியாளர்களுக்கு ஊர் மாற்றல் உத்தரவை உடனடியாக வழங்கிட வேண்டும். பகுதி நேர ஊழியர்களுக்கு, ஊதியம் இல்லாமல் பணிபுரிபவர்களுக்கு நியமன உத்தரவு உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் பூலுடையார், பச்சையப்பன், நாகையன், கந்தசாமி, பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில செயலாளர் வண்ணமுத்து ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.
Related Tags :
Next Story