மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் மின்வாரிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் சார்பில் நேற்று விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் உள்ள மின்வாரிய அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரிய தொழிலாளர்கள், அலுவலர்கள், பொறியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை 37 மாதங்கள் கடந்து இதுவரை வழங்கப்படவில்லை. ஏற்கனவே பெற்று வந்த சலுகைகளை மின்வாரிய ஆணை இரண்டின் மூலம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி கோஷம் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளன நிர்வாகி குப்புசாமி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி, பொறியாளர் சங்க பொருளாளர் கணேசன், ஐக்கிய சங்க நிர்வாகி கவுஸ்பாஷா ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கை விளக்க உரையாற்றினர். இதில் விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் மின்வாரிய பணியாளர்கள், அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story