மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காட்பாடியில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர்
புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக காட்பாடியில் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டுக்குழு இணை ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திட்ட தலைவர் தருமன், ஐ.என்.டி.யூ.சி. தலைவர் நல்லண்ணன், எம்ப்ளாயிஸ் பெடரேஷன் மாநில இணை செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்க கூடாது என கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் மின்ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஜனதா சங்கத் திட்ட செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story