விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் விழுப்புரம் மின் திட்டக்கிளை சார்பில் விழுப்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊதிய உயர்வு நிலுவைத்தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும், பல மாதங்களாக வழங்காமல் உள்ள இரட்டிப்பு ஊதியம், பயணப்பட்டியல், பொது வருங்கால வைப்பு நிதி, முன்பண கடன் ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 1.12.2019-க்கு பிறகு 16.5.2023-க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒப்பந்தத்தில் கண்ட ஊதிய உயர்வு பலன்களை வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். திட்ட செயலாளர் சேகர், பொருளாளர் ஏழுமலை, கோட்ட செயலாளர் அருள் ஆகியோர் கண்டன உரையாற்றினர். துணைத்தலைவர் புருஷோத்தமன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் குணசேகர் நன்றி கூறினார்.