மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பெரம்பலூர் வட்ட கிளையின் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் மின் வாரிய உபகோட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அமைப்பின் மாநில செயலாளர் அகஸ்டின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மின் ஊழியர்கள் மின் வினியோகத்தை தனியார் மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மத்திய-மாநில அரசுகள் கைவிட வேண்டும். வேலை பளு ஒப்பந்த பதவிகளை ரத்து செய்வதற்கு முன் 9ஏ வழங்கி பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story