எலக்ட்ரீசியன் தற்கொலை
எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்
சூரமங்கலம்:
சேலம் இரும்பாலை காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன். இவருடைய மகன் ராமன் (வயது 30). எலக்ட்ரீசியன். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் ராமன் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து இரும்பாலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமன், தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story