எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை மேலப்பாளையத்தில் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்தவர் நாராயணபெருமாள் (வயது 25). எலக்ட்ரீசியன். இவர் மேலப்பாளையம் நாச்சியார் காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். கடந்த 2 நாட்களாக இவரது வீடு திறக்கப்படாமல் இருந்தது. மேலும் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் மேலப்பாளையம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு நிலைய வீரர்களுடன் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது நாராயண பெருமாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.