மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மின்ஊழியர் சாவு
சங்கரன்கோவில் அருகே மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மின்ஊழியர் பரிதாபமாக இறந்தர்.
தென்காசி
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கண்ணி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 59). இவர் கரிவலம்வந்தநல்லூர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
கடந்த 15-ந் தேதி சொக்கலிங்கபுரத்தில் மின் இணைப்பு கொடுப்பதற்காக மின்கம்பத்தில் ஏறி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக சின்னச்சாமி தவறி கீேழ விழுந்து காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story