மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்கு மின் வாகனங்கள்: கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல் அமைச்சர்


மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்கு மின் வாகனங்கள்: கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல் அமைச்சர்
x

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 25 மின் வாகனங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை,

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.42 கோடி மதிப்பிலான 25 மின் வாகனங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் மாசு கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு மின் வாகனங்கள் வழங்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த அறிவிப்பின் படி, தற்போது மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவர்களின் பயன்பாட்டிற்கு முதற்கட்டமாக 25 மின் வாகனங்கள் வழங்கப்படுகிறது. தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மூன்று மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு பசுமை விருதையும், மற்றும் ஐந்து தொழிற்சாலை, கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர் விருதுகளை முதல் அமைச்சர் வழங்க இருக்கிறார்.


Next Story