மின்சார ரெயில்கள் ரத்து: மாநகர பஸ்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்


மின்சார ரெயில்கள் ரத்து: மாநகர பஸ்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்
x

மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னை,

சென்னை சென்ட்ரல், எழும்பூருக்கு அடுத்ததாக பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தும் தாம்பரம் ரெயில் நிலையத்தை 3-வது முனையமாக மாற்றுவதற்காக விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) 55 மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதால் ரெயில் பயணம் மேற்கொள்ள வந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும், ரெயில்கள் ரத்து காரணமாக சென்னை மற்றும் புறநகரில் உள்ள பஸ் நிலையங்களிலும், மாநகரப் பஸ்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிக அளவில் மக்கள் குவிந்து வருவதால் கூடுதல் எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

குறிப்பாக, ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதிக அளவிலான வாகனங்கள் சாலைகளை ஆக்கிரமித்துள்ளன. இதனால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க கூடுதல் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Next Story