சாலையின் நடுவில் மின்கம்பம்


சாலையின் நடுவில் மின்கம்பம்
x
தினத்தந்தி 19 Aug 2023 2:30 AM IST (Updated: 19 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

சாலையின் நடுவில் மின்கம்பம்

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் பேரூராட்சி 5-வது வார்டு மல்லி செட்டியார் வீதியில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் நெசவுத்தொழில் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையின் நடுவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இதனால் அந்த சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதில்லை. முதியோர், கர்ப்பிணிகள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட வந்து செல்ல முடியவில்லை. இதனால் அவர்களை குறிப்பிட்ட தூரம் தூக்கி செல்ல வேண்டி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, நீண்ட நாட்களாக சாலையின் நடுவில் உள்ள அந்த மின்கம்பம் பழுதடைந்து கிடக்கிறது. அதில் இருந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுகிறது. வாகனங்களை வீட்டுக்கு கொண்டு வந்து நெசவு செய்த சேலைகளை ஏற்றி அனுப்ப முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.


Next Story