அரசு பஸ் மோதி மின் கம்பம் சேதம்


அரசு பஸ் மோதி மின் கம்பம் சேதம்
x

வேடசந்தூர் அருகே, அரசு பஸ் மோதி மின்கம்பம் சேதம் அடைந்தது.

திண்டுக்கல்

வேடசந்தூரில் இருந்து பூத்தாம்பட்டிக்கு அரசு பஸ் ஒன்று நேற்று வந்தது. அந்த பஸ்சை கமலக்கண்ணன் (வயது 35) ஓட்டினார். பூத்தாம்பட்டியில் பயணிகளை இறக்கி விட்டு, மீண்டும் அந்த பஸ் வேடசந்தூர் நோக்கி செல்ல தயாரானது.

எரியோடு-வேடசந்தூர் சாலையில், பூத்தாம்பட்டி அருகே பஸ்சை டிரைவர் திருப்பி வர கொண்டு சென்றார். அப்போது அங்குள்ள வளைவில் எதிரே லாரி ஒன்று வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ், சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தின் இழுவை கம்பி மீது மோதியது. இதனால் மின்கம்பம் சேதம் அடைந்து சாய்ந்தது. இதனையடுத்து மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பஸ்சின் மீது மின்கம்பம் விழாமல், எதிரே விழுந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

விபத்து குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார், மின்வாரிய அதிகாரிகள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.


Next Story