மின் மோட்டார் திருடியவர் கைது


மின் மோட்டார் திருடியவர் கைது
x

சூளகிரி அருகே மின்மோட்டார் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

சூளகிரி:

சூளகிரி அருகே மின்மோட்டார் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

சூளகிரி தாலுகா முதுகுறுக்கி அருகே சூளகுண்டாவை சேர்ந்த விவசாயி பிரபாகரன் (வயது 29). இவரது தோட்டத்தில் இருந்த மின்மோட்டாரை மர்மநபர் திருடினார். இதை கவனித்த பிரபாகரன், அந்த நபரை கையும், களவுமாக பிடித்து பேரிகை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த நபரின் பெயர் சங்கர் (32) என்பதும், சூளகிரி தாலுகா முதுகுறுக்கி அருகே மகாதேவபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. போலீசார் உடனே சங்கரை கைது செய்தனர்.


Next Story