மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்


மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2022 12:15 AM IST (Updated: 11 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மின்வினியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின்பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார். அவர், கூட்டத்தில் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சங்கரன்கோவில் மின்வினியோக செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியனுக்கு உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் சங்கரன்கோவில் கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து மின்பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் சங்கரன்கோவில் நகர்ப்புற பிரிவில் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடக்கும் சிறப்பு முகாமை ஆய்வு செய்தார். இந்த முகாம் வருகிற 31-ந்தேதி வரை நடக்கிறது. அதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


Next Story