திருச்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த ஆய்வு கூட்டம்
திருச்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
திருச்சி
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2023 தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஜவுளித்துறை ஆணையரும், திருச்சி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான வள்ளலார் தலைமை தாங்கினார். மாவட்ட தேர்தல் அலுவலரும் ,மாவட்ட கலெக்டருமான பிரதீப்குமார் முன்னிலை வகித்தார். ்கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் பணி எந்த நிலையில் உள்ளது. அந்த பணியின் முன்னேற்றம் குறித்த ஆய்வு நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story