வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள நாளை கடைசி நாள்


வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள நாளை கடைசி நாள்
x
தினத்தந்தி 7 Dec 2022 12:15 AM IST (Updated: 7 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,880 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்களை வழங்க நாளை (வியாழக்கிழமை) கடைசி நாளாகும் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,880 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்களை வழங்க நாளை (வியாழக்கிழமை) கடைசி நாளாகும் என கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சுருக்கமுறை திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 1,880 வாக்குச்சாவடிகளில் கடந்த மாதம் (நவம்பர்) 4 நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக 45,656 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ள தவறிய பொதுமக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தங்களுக்கு உரிய படிவங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி மையங்கள் அல்லது தொடர்புடைய தாசில்தார் அலுவலகங்களில் நாளைக்குள் (வியாழக்கிழமை) வழங்கலாம். இந்த சுருக்கமுறைத் திருத்தப்பணிகள் நிறைவுப்பெற்று வருகிற 2023 ஜனவரி 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

ஆதார் இணைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி 71 சதவீத வாக்காளர்களின் ஆதார் எண் சேகரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க படிவம் 6பி பூர்த்தி செய்தும் தொடர்புடைய தாசில்தார் அலுவலகத்தில் வழங்கலாம்.

மேலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலிருந்தே பெற http://www.nvsp.in என்ற இணையதள முகவரியில் தேசிய வாக்காளர் சேவை தளத்திற்குச் சென்று Apply Online / Correction of entries என்ற லிங்க் மூலம் விண்ணப்ப சேவைகளை பெறலாம். மேலும், செல்போனில் Voters Helpline என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 1950 என்கிற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story