ஆறுமுகநேரியில் அரசுபஸ் மோதி மூதாட்டி சாவு


ஆறுமுகநேரியில் அரசுபஸ் மோதி மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 25 Oct 2023 12:15 AM IST (Updated: 25 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் அரசுபஸ் மோதி மூதாட்டி இறந்து போனார்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியில் மகளை பார்க்க சென்ற மூதாட்டி மீது அரசு பஸ் மோதி பலியானார்.

மூதாட்டி

குரும்பூர் அருகே உள்ள அங்கமங்கலம் கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி ராமலட்சுமி (வயது 60). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் தூத்துக்குடியில் கூட்டுறவுத் துறையில் தணிக்கையாளராக உள்ளார். கணவர் இறந்து விட்ட நிலையில் ராமலட்சுமி தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று தூத்துக்குடியிலுள்ள மகளை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு குரும்பூரிலிருந்து பஸ்சில் ஏறி ஆறுமுகநேரி சென்றுள்ளார்.

அங்குள்ள கடைக்கு சென்று மகளுக்கு சில பொருட்களை வாங்கி கொண்டு, தூத்துக்குடிக்கு பஸ் ஏறுவதற்காக ஆறுமுகநேரி பஸ் நிறுத்தம் நோக்க நடந்து சென்று கொண்டிருந்தார்.

பஸ் மோதியது

ஆறுமுகநேரி மெயின்பஜார் பஸ்நிறுத்தம் அருகே சென்ற அவர் மீது, திருச்செந்தூரில் இருந்து மூலக்கரை வழியாக நாசரேத் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ் அவர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரது கால்கள் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. இதில் அவர் பலத்த காயமடைந்து ரத்த வௌ்ளத்தில் துடித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

டிரைவர் கைது

இது குறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் விரைந்து சென்று ராமலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் அரசு பஸ் டிரைவர் அணியாபரநல்லூரை சேர்ந்த பெருமாள் மகன் உடையார்(52) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


Next Story