மின்சாரம் தாக்கி முதியவர் பலி


மின்சாரம் தாக்கி முதியவர் பலி
x

உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை, -

உளுந்தூர்பேட்டை அருகே கிளாப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 60). இவர் அப்பகுதியை சேர்ந்த சிலருடன் சாகை வார்த்தல் நிகழ்ச்சிக்காக அங்குள்ள மாரியம்மன் கோவிலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அண்ணாமலை கோவிலின் மேல்புறத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்த போது அங்கிருந்த ஒயரை எடுத்துப்போட முயன்றார். இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த அண்ணாமலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அண்ணாமலை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story