நாமக்கல் மண்டலத்தில் முட்டை விற்பனையை கண்காணிக்க 60 பேர் கொண்ட குழு அமைப்பு கோழிப்பண்ணையாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் தகவல்


நாமக்கல் மண்டலத்தில் முட்டை விற்பனையை கண்காணிக்க 60 பேர் கொண்ட குழு அமைப்பு கோழிப்பண்ணையாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் தகவல்
x
தினத்தந்தி 4 July 2023 12:30 AM IST (Updated: 4 July 2023 11:14 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விற்பனையை கண்காணிக்க 60 பேர் கொண்ட குழு அமைப்பு கோழிப்பண்ணையாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விற்பனையை கண்காணிக்க 60 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு இருப்பதாக கோழிப்பண்ணையாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கோழிப்பண்ணையாளர்கள் சந்திப்பு கூட்டம்

நாமக்கல் மண்டலத்தில் கடந்த மே மாதம் 1-ந் தேதி முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலைக்கே முட்டைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வியாபாரிகள் சிலர் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து பண்ணையாளர்களிடம் குறைத்து கேட்பதாக புகார் எழுந்தது.

எனவே இதனை தடுக்கும் பொருட்டு நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் நேற்று கோழிப்பண்ணையாளர்கள் சந்திப்பு சிறப்பு கூட்டம் குழுவின் துணைத்தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடந்தது. நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் முட்டை கொள்முதல் விலையில் இருந்து, விலையை குறைத்து கேட்கும் (மைனஸ் விலை) வியாபாரிகளால் ஏற்படும் தொழில் பாதிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கண்காணிப்பு குழு

மேலும் அதை கட்டுப்படுத்த வட்டார அளவில் 60 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த குழு அனைத்து பண்ணைகளிலும் எவ்வளவு முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது, யாரிடம் முட்டையை விற்பனை செய்கிறார்கள், மைனஸ் இல்லாமல் விற்பனை செய்கிறார்களா? என்பதை கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின் நாமக்கல் மண்டல துணைத்தலைவர் சிங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- முட்டை கொள்முதல் விலையில் இருந்து மைனஸ் கேட்கும் வியாபாரிகளால் ஏற்படும் தொழில் பாதிப்பை தடுக்க 60 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட உள்ளது. அந்த குழுவினர் மைனஸ் இல்லாமல் முட்டையை விற்பனை செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்வார்கள். பண்ணையாளர்கள் வெளிப்படை தன்மையுடன் கண்காணிப்பு குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தரராஜ் மற்றும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நிர்வாகிகள், கோழிப்பண்ணையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story