கல்வி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
ஆலங்குளம் அருகே கல்வி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகிலுள்ள இடைகாலில் ஸ்டஅக் ஹைடெக் பள்ளி-ஐன்ஸ்டின் கல்லூரி இணைந்து நடத்திய "கற்க கசடற"கல்வி விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. ஸ்டஅக் ஹைடெக் பள்ளியின் வளாகத்தில் துவங்கிய மாரத்தான் போட்டியை தென்காசி மாவட்ட தடகள சங்கத் தலைவரும் ஐன்ஸ்டின் கல்லூரி செயலர் ஆலடி எழில்வாணன், மாவட்ட தடகள சங்கச் செயலாளர் செல்லபாண்டியன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில் 5 கி.மீ. மாரத்தானில் 10ம் வகுப்புக்கு உட்பட்ட (14 வயது) மாணவர்கள் பிரிவில் முதலாவதாக அஜிதா இரண்டாவதாக ஜெயபாரதி மூன்றாவதாக அட்லின் ஆகியோர் வெற்றிபெற்றனர்.11,12 ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான மாரத்தானில் ஆண்கள் பிரிவில் சுமன்குமார், கருத்த பாண்டி, கபின் மாதேஷ், பிரவீன், முருகன் ஆகியோர் முதல் 5 இடங்களையும், பெண்கள் பிரிவில் லாவண்யா, சௌமியா, கார்த்திகா, சங்கீதா, அனுஷ்கா ஆகியோர் முதல் 5 இடங்களை பெற்றனர்.
10 கி.மீ. மாரத்தானில் ஆண்கள் பெண்கள் என இரு பிரிவுகளாக நடந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் அஜித்குமார், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தனுஜ், கென்யா நாட்டைச் சேர்ந்த எலிஜா கேமேய் ஆகியோர் முதல் மூன்று பரிசுகளை பெற்றனர்.பெண்கள் பிரிவில் கென்யா நாட்டை சேர்ந்த கிறிஸ்டின் முயங் கா, கௌசிகா, கனகலட்சுமி ஆகிய முதல் மூன்று இடங்களை பெற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் முன்பு நடந்தது.
இந்த விழாவுக்கு ஐன்ஸ்டின் கல்லூரி செயல ருமான ஆலடி எழில்வாணன், ஸ்டஅக் ஹைடெக் பள்ளிதலைவர் முருகன் தாளாளர் புனிதா செல்வி ஆகியோர் தலைமை தாங்கினர்.முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா லெட்சுமணன், பாப்பாக்குடி ஒன்றிய திமுக செயலாளர் மாரிவண்ணமுத்து, ஸ்டக் ஹைடெக் பள்ளியின் செயலர் ஆகாஷ், பள்ளியின்.மூத்த ஆலோசகர் ஜோசப், பேரூராட்சி துணைத் தலைவர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஆகாஷ் அனைவரையும் வரவேற்றார்.
தொடர்ந்து மாரத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை பள்ளியின் பயிற்சியாளர் நிகில் நிர்வாக அலுவலர் சிவக்குமார் ஐன்ஸ்டின் கல்லூரி கோபி சங்கர், சுரேஷ், சுரேஷ் தங்க கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.மேலும் விழாவில் பள்ளி ஆசிரியர்கள் கல்லூரி பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.