காமராஜர் பிறந்தநாள்: கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


காமராஜர் பிறந்தநாள்: கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

காமராஜரின் 120-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் (இன்று) காலை 10 மணியளவில், சென்னை பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப் படத்துக்கு அமைச்சர்கள் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

இந்த நிலையில், காமராஜர் பிறந்த நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்! போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்!

கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்!

தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திடப் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதிகொள்வோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story