பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி விட்டார் எடப்பாடி பழனிசாமி - டி.டி.வி.தினகரன் பேட்டி

அதிமுக பொதுக்குழுவிற்கு சென்று உண்மையை உடைத்த ஓபிஎஸ், வைத்திலிங்கம் ஆகியோரின் துணிச்சல் பாராட்டுக்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
சேலம்,
சேலத்தில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பணத்திற்கும் பதவிக்கும் அடிமையானவர்கள் ஈபிஎஸ் பக்கம் இருக்கிறார்கள். அதிமுக ஃபெயிலியர் ஆகிவிட்டது, அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி விட்டார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக பொதுக்குழுவிற்கு சென்று உண்மையை உடைத்த ஓபிஎஸ், வைத்திலிங்கம் ஆகியோரின் துணிச்சல் பாராட்டுக்குரியது. அம்மாவின் சிங்கக் குட்டிகள் அமமுகவினர், நேர்மையான முறையில் போராடி அமமுக ஆட்சிக்கு வரும் என்றார்.
Related Tags :
Next Story