"மகளிர் உரிமைத்தொகை" மாதம் ரூ.1000 வரும் செப்டம்பர் 15 முதல் வழங்கப்படும்-தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரம்
'மகளிர் உரிமைத்தொகை' தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து உள்ளார்.
Live Updates
- 20 March 2023 12:56 PM IST
கோவில் பெருந்திட்ட பணிகள்
பழனி, திருத்தணி, சமயபுரம் கோவில் பெருந்திட்ட பணிகள் 485 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்
- 20 March 2023 12:54 PM IST
சேலத்தில் ஜவுளி பூங்கா
சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டு 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்
- 20 March 2023 12:52 PM IST
பேருந்து பணிமனைகள் மேம்பாடு
வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் பேருந்து பணிமனைகள் மேம்படுத்தப்படும்
- 20 March 2023 12:47 PM IST
செம்மொழி பூங்கா
கோவையில் 172 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா நிறுவப்படும்
- 20 March 2023 12:46 PM IST
பள்ளிவாசல், தேவாலயங்களை புதுப்பித்தல்
பள்ளிவாசல், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
- 20 March 2023 12:44 PM IST
நீர் நிலைகள் புதுப்பித்தல்
கிராமப்புறங்களில் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் நீர் நிலைகள் புதுப்பிக்கப்படும்
- 20 March 2023 12:40 PM IST
400 கோவில்களில் குடமுழுக்கு விழா
வரும் ஆண்டில் 400 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படும்
- 20 March 2023 12:26 PM IST
புதிய ஐடி பூங்கா
ஈரோடு, நெல்லையில் ஐடி பூங்கா (தகவல் தொழில்நுட்ப பூங்கா) அமைக்கப்படும்
- 20 March 2023 12:23 PM IST
புதிய தொழில்நுட்ப நகரங்கள் அமைப்பு
புதிதாக TNTECH CITY (தொழில்நுட்ப நகரங்கள்) அமைக்கப்படும். சென்னை, கோவை. ஓசூரில் தொழில்நுட்ப நகரங்கள் அமைக்கப்படும்
- 20 March 2023 12:20 PM IST
நெய்தல் மீட்பு இயக்கம்
கடல் அரிப்பு, கடல் மாசுபாட்டை குறைக்க 2 ஆயிரம் கோடி ரூபாயில் நெய்தல் மீட்பு இயக்கம் செயல்படுத்தப்படும்