மின் நுகர்வோர் கூட்டம்
மின் நுகர்வோர் கூட்டம் வருகிற 7-ந் தேதி நடக்கிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கும்பகோணம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் திருவேங்கடம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கும்பகோணம் வடக்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கும்பகோணம் ராஜன் தோட்டம் மின்வாரிய அலுவலகத்தில் தஞ்சாவூர் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் செட்டி மண்டபம், திப்புராஜபுரம், நாச்சியார் கோவில், திருநாகேஸ்வரம், செம்மங்குடி, திருவிடைமருதூர், ஆடுதுறை, திருநீலக்குடி, கதிராமங்கலம், பந்தநல்லூர், கோணுளாம்பள்ளம், குறிச்சி, திருப்பனந்தாள், சோழபுரம் மற்றும் கும்பகோணம் வடக்கு கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் நேரில் கலந்து கொண்டு மின் வினியோகம் தொடர்பான தங்களது குறைகளை மனுக்களாக கொடுத்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.