கிழக்கு மண்டல அளவிலான வாலிபால் போட்டிகள் தொடக்கம்


கிழக்கு மண்டல அளவிலான வாலிபால் போட்டிகள் தொடக்கம்
x

கிழக்கு மண்டல அளவிலான வாலிபால் போட்டிகள் தொடங்கின.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் அரியலூர் கிழக்கு மண்டல சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று காலை தொடங்கின. 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் திருச்சி, விழுப்புரம், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட கிழக்கு மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டிகள் லீக், நாக் அவுட் மற்றும் லீப் முறையில் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் அரியலூர்- விழுப்புரம் அணிகளும், பெரம்பலூர்-நாகப்பட்டினம் அணிகளும் மோதின. இதில் 25-13, 25-19 என்ற கோல் கணக்கில் விழுப்புரம் அணியும், 25-17, 25-15 என்ற கோல் கணக்கில் பெரம்பலூர் அணியும் வெற்றி பெற்றன. முன்னதாக மாலையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி, மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த மின்விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். மாலையில் நடந்த போட்டியை சின்னப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) பகல், இரவில் போட்டிகள் நடக்கின்றன. போட்டிக்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட வாலிபால் அசோசியேசன் கழகத்தின் செய்திருந்தனர்.


Next Story