குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் - அமைச்சர்கள் ஆய்வு
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
குலசேகரன்பட்டினம்,
உலக புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வரும் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அடுத்த மாதம் 5-ம் தேதி மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது.
கடந்த 2 வருடமாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதியில்லை. இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் வழக்கத்தை விட அதிக அளவு பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
பக்தர்களுக்கு செய்யப்படும் வசதிகள் குறித்தும் முன்னேற்பாடுகள் குறித்தும் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு, தசரா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Related Tags :
Next Story