டெட் தேர்ச்சி மறுபிரதி சான்றிதழ்களை இ-சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


டெட் தேர்ச்சி மறுபிரதி சான்றிதழ்களை இ-சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
x

டெட் தேர்ச்சி மறுபிரதி சான்றிதழ்களை இ-சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை,

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குநர் (தகுதித் தேர்வு) மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2012, 2013, 2017 மற்றும் 2019-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-1, தாள்-2) தேர்ச்சி சான்றிதழ்களின் மறுபிரதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல் மறுபிரதி சான்றிதழ்கள் ஆன்லைன் வாயிலாக வழங்க இருப்பதால் அச்சான்றிதழ் கோரி வரும் விண்ணப்பங்களை தேர்வுவாரியத்துக்கு அனுப்ப வேண்டாம் என மாவட்ட முதன்மைகல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எனவே, மறுபிரதி சான்றிதழ்கள் கோரும் விண்ணப்பதாரர்களை இ-சேவை மையத்தை அணுகி மறுபிரதி கட்டணத் தொகை ரூ.200 மற்றும் இ-சேவை மைய சேவை கட்டணம் ரூ.50 (மொத்தம் ரூ.250) செலுத்தி பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தும்படி முதன்மைக் கல்வி அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.


Next Story