ஆடிப்பெருக்கை முன்னிட்டு மலர் சந்தைகளில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு..!


ஆடிப்பெருக்கை முன்னிட்டு மலர் சந்தைகளில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு..!
x
தினத்தந்தி 2 Aug 2023 10:18 AM IST (Updated: 2 Aug 2023 2:27 PM IST)
t-max-icont-min-icon

ஆடிப்பெருக்கை முன்னிட்டு மலர் சந்தைகளில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

சென்னை,

ஆடிப்பெருக்கு விழா நாளை (3-ந்தேதி) என்பதால் மலர் சந்தைகளில் பூக்களின் விலை இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மதுரை, திண்டுக்கல், தோவாளை, தூத்துக்குடி மலர் சந்தைகளில் மல்லிகை, முல்லை, பிச்சிப்பூ ஆகியவற்றின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.800க்கும், முல்லை கிலோ ரூ.600-க்கும், பிச்சிப்பூ கிலோ ரூ.700க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.500க்கும், செண்டு கிலோ ரூ.100க்கும், தக்காளி ரோஸ் கிலோ ரூ.250க்கும், செவ்வந்தி ரூ.280க்கும், அரளிப்பூ ரூ.200க்கும், மரிக்கொழுந்து ரூ.100க்கும், வாடாமல்லி ரூ.100க்கும், கோழிக்கொண்டை ரூ.120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆண்டிப்பட்டி மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.700க்கும், முல்லை, பிச்சிப்பூ, கனகாம்பரம் உள்ளிட்டவை ரூ.500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story