அரசியல் காரணங்களால் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்காமல் உள்ளனர் - அன்புமணி ராமதாஸ்
வழக்கறிஞர்கள் செயல்பாட்டு குழுமத்தின் சார்பில், இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
சென்னை,
தமிழ் மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் என்பதை "தமிழ்நாடு உயர்நீதிமன்றம்" என பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்ற இரு கோரிக்கைகளை வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் செயல்பாட்டு குழுமத்தின் சார்பில், இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், "தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும். தமிழை வழக்காடு மொழியாக மாற்றும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அரசியல் காரணங்களால் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்காமல் உள்ளனர்" என்று கூறினார்.
Related Tags :
Next Story