வரத்து குறைவால்களையிழந்த ஆண்டிப்பட்டி ஆட்டுச்சந்தை


வரத்து குறைவால்களையிழந்த ஆண்டிப்பட்டி ஆட்டுச்சந்தை
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வரத்து குறைவால் ஆண்டிப்பட்டி ஆட்டுச்சந்தை களையிழந்தது.

தேனி

ஆண்டிப்பட்டி நகரில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் ஆட்டு்ச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு தேனி, அல்லிநகரம், வத்தலக்குண்டு மற்றும் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆட்டு வியாபாரிகள் தங்கள் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். ஆண்டிப்பட்டி சந்தையில் விற்பனைக்கு வரும் வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை வாங்க தென்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருவார்கள்.

குறிப்பாக பண்டிகை நாட்களுக்கு முந்தைய வாரங்களில் ஆண்டிப்பட்டி ஆட்டுச் சந்தையில் விற்பனை அதிகரித்து காணப்படும். இந்நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆண்டிப்பட்டி ஆட்டுச்சந்தையில் நேற்று ஆடுகள் வரத்து மிகவும் குறைந்தே காணப்பட்டது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்ததால் ஆண்டிப்பட்டி ஆட்டுச்சந்தை களையிழந்து காணப்பட்டது. எப்போதும் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வரும் நிலையில் நேற்று 100-க்கும் குறைவான ஆடுகளே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. விற்பனைக்கு வந்த ஆடுகளின் வயதை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பசுந்தீவனங்களால் வளர்க்கப்பட்ட இளம் ஆடுகள் மொத்தமாக கிலோ ரூ.600 முதல் ரூ.700 வரை விற்பனை செய்யப்பட்டது.


Related Tags :
Next Story