குடிபோதையில் தகராறு; தட்டிக்கேட்டவர் குத்திக்கொலை


குடிபோதையில் தகராறு; தட்டிக்கேட்டவர் குத்திக்கொலை
x
தினத்தந்தி 24 Oct 2023 6:45 PM (Updated: 24 Oct 2023 6:46 PM)
t-max-icont-min-icon

சாயல்குடி அருகே குடிபோதையில் தகராறில் ஈடுபட்டவரை தட்டிக்கேட்டவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

தகராறு

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள தெற்கு நரிப்பையூர் கிராமத்தை சேர்ந்தவர் முகம்மது அஜீஸ்(வயது 40). தொழிலாளி. இவருடைய சித்தி மகன் முகம்மது அலி (35). இவர்களது வீடுகள் அருகருகே உள்ளன. சம்பவத்தன்று முகம்மது அலி குடிபோதையில் வந்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த முகம்மது அஜீஸ், முகம்மது அலியை கண்டித்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த முகம்மது அலி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென முகம்மது அஜீசின் கழுத்தில் குத்தினார்.

குத்திக்கொலை

இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் முகம்மது அஜீஸ் சரிந்து விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அறிந்த சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் போலீசார் அங்கு சென்று முகம்மது அஜீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முகம்மது அலியை கைது செய்தனர்.


Next Story