முருங்கைக்காய் விலை வீழ்ச்சி


முருங்கைக்காய் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 3 Sept 2023 3:45 AM IST (Updated: 3 Sept 2023 3:46 AM IST)
t-max-icont-min-icon

ககடமலை-மயிலை ஒன்றியத்தில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

தேனி

கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஏராளமான விவசாயிகள் தங்களது தோட்டத்தில் முருங்கை விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது முருங்கை சீசன் தொடங்கியுள்ள நிலையில் போதுமான அளவு மழை பெய்துள்ளது. இதனால் முருங்கைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. முருங்கைக்காய்களை விவசாயிகள் பறித்து மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வருகின்றனர். ஆனால் மார்க்கெட்டுகளில் முருங்கைக்காய் வரத்து அதிகரித்ததால் அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.20-க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.10-க்கு விற்பனையாகிறது. இதனால் விளைச்சல் அதிகரித்தும், உரிய விலை கிடைக்காததால் முருங்கை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "கடந்த 2 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் முருங்கைக்காய் வரத்து குறைந்து காணப்பட்டது. அந்த நேரத்தில் விலை அதிகரித்தது. ஆனால் தற்போது விளைச்சல் அதிகரித்தும், விலை இல்லை. கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து முருங்கை விவசாயிகளுக்கு நஷ்டம் மட்டுமே ஏற்பட்டு வருகிறது. எனவே முருங்கை விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்"் என்றனர்.


Related Tags :
Next Story