போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
அருப்புக்கோட்டை அருகே கல்லூரணி எஸ்.பி.கே.மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் தலைமையில் போதை பொருள் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் கலந்து கொண்டு பேசினார். அப்போது, மாணவ-மாணவிகள் எதிர்கால செல்வங்கள். அவர்கள் தவறான வழியில் சென்றால் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் சமுதாயத்திற்கே கேடுவிளையும். மாணவர்கள் ஒழுக்கத்துடன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். உலகத்தில் உள்ள 192 நாடுகளை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு பற்றியும், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றியும் விளக்கிக் கூறினார். மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்ச்சி நடத்தி பரிசுகள் வழங்கினார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். கருத்தரங்கில் சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் அழகு சுந்தரம். போலீஸ் துணைசூப்பிரண்டு ஜெகநாதன் ஆகியோரும் பேசினர் தமிழாசிரியர் தியாகராஜன் வரவேற்று நன்றி கூறினார்.