சாலையோர முட்புதர்களை அகற்றிய டிரைவா்கள்


சாலையோர முட்புதர்களை அகற்றிய டிரைவா்கள்
x
தினத்தந்தி 19 Oct 2023 12:30 AM IST (Updated: 19 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே சாலையோர முட்புதர்களை டிரைவா்கள் அகற்றினர்.

நீலகிரி


பந்தலூர் அருகே அய்யன்கொல்லியிலிருந்து மூலைக்கடை, கோட்டப்பாடி, மழவன்சேரம்பாடி, கொளப்பள்ளி, ஏலமன்னா, எலியாஸ்கடை வழியாக பந்தலூருக்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் கூடலூர் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, நம்பியார்குன்னு, எருமாடு, தாளூர், கோவை, திருப்பூர், உள்பட பல பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது .சுல்த்தான்பத்தேரியிலிருந்து பாலக்காட்டிற்கு கேரள மாநில அரசுபசும் சென்று வருகிறது. மேலும் இந்தசாலையில் ஏராளமான ஜீப்புகள், ஆட்டோக்கள் மற்றும் பசுந்தேயிலை மூட்டைகளைகள், தேயிலைதூள் மூட்டைகள் ஏற்றி செல்லும் லாரிகள் சென்று வருகின்றன. இந்தநிலையில் அய்யன்கொல்லி மூலைகடை முதல் எலியாஸ்கடைவரை சாலையோரத்தில் முட்புதர்கள் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் குண்டும், குழியுமாக பழுதடைந்து காணப்பட்டது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் நடந்தன. இதையடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்றும், முட்புதர்களை வெட்டி அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து வாகன ஓட்டிகள், டிரைவர்கள் சாலையோர முட்புதர்களை வெட்டி அகற்றினர். மேலும், குண்டும், குழியுமான இடங்களில் ஜல்லிகற்களை போட்டு நிரப்பினர். இதனால் டிரைவர்களை பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story