டிரைவருக்கு 2 ஆண்டு சிறை


டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
x

கும்பகோணத்தில் மினி பஸ் மோதி பெண் பலியான வழக்கில் டிரைவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணத்தில் மினி பஸ் மோதி பெண் பலியான வழக்கில் டிரைவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

பஸ் மோதி பெண் பலி

கும்பகோணம் அருகே உள்ள, அம்மன்பேட்டை தச்சர் தெரு பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட். இவருடைய மனைவி சகாயராணி (வயது 41). இவர்களுடைய மகன் ஜான்பிரிட்டோ(20).கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி இரவு சகாயராணி தனது மகன் ஜான்பிரிட்டோவுடன் கும்பகோணம் பஸ் நிலையம் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் சகாயராணி மீது மோதியது. இதில் சகாயராணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இது குறித்து கும்பகோணம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி பஸ் டிரைவர் அலெக்சாண்டரை கைது செய்தனர்.

2 ஆண்டு சிறை

இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் நீதிபதி பாரதிதாசன் மினி பஸ் டிரைவர் அலெக்சாண்டருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.


Next Story