ஓட்டுநர் - நடத்துனர்கள் சீருடை மற்றும் பேட்ஜ் அணிய வேண்டும்: மாநகர போக்குவரத்துக் கழகம் உத்தரவு
ஓட்டுநர் - நடத்துனர்கள் கட்டாயம் சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
ஓட்டுநர் - நடத்துனர்கள் பணியின்போது சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக அனைத்து கிளை மேலாளர்கள்-மண்டல மேலாளர்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்
மாநகரப் போக்குவரத்து கழகத்தை சார்ந்த அனைத்து பணிமனைகளிலும் பணிபுரியும் ஓட்டுநர் - நடத்துனர்கள் கட்டாயம் சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிய வேண்டும். சிலர் பேட்ஜ் அணியாமல் பணி செய்வது குறித்து புகார் பெறப்பட்டுள்ளது.எனவே ஓட்டுநர் - நடத்துனர்கள் சீருடை மற்றும் பேட்ஜ் அணிந்து பணிபுரிகிறார்களா என்பதை கிளை மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்கள் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story