குழாய் உடைந்து வீணாக வெளியேறும் குடிநீர்


குழாய் உடைந்து வீணாக வெளியேறும் குடிநீர்
x

குழாய் உடைந்து வீணாக வெளியேறும் குடிநீர்

நாகப்பட்டினம்

திருமருகல் அருகே நாகூர்-கங்களாஞ்சேரி சாலை வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது. கடந்த சில வாரங்களாக ஒக்கூர் பெரியார் சிலை அருகில் 2 இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் அதிக அளவில் வெளியேறி வாய்க்காலில் கலந்து வீணாகிறது. இந்த குடிநீர் குழாய் உடைப்பு இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் உத்தமசோழபுரம், பூதங்குடி, நரிமணம், சுள்ளாங்கால் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பொதுமக்கள், திருமருகல்.


Next Story