குற்றாலத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளர் கைது


குற்றாலத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளர் கைது
x

குற்றாலத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

குற்றாலத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளரை போலீசார் கைது செய்தனர்.

குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளர்

தென்காசி மாவட்டம் குற்றாலம் குடியிருப்பு பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய திட்ட பிரிவு கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் சீனிவாசன் (வயது 50).

இவர் பராமரிப்பு மற்றும் திட்டப்பிரிவு அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்த ராமசுப்பிரமணியன் என்பவருக்கு வந்த அரியர் தொகை ரூ.3 லட்சத்து 93 ஆயிரத்து 700-ஐ வழங்குவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்

இதுகுறித்து ராமசுப்பிரமணியன், தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் நேரடி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தெய்வக்கண் ராஜா, ஏட்டுகள் பிரபு, வேணுகோபால், கணேசன் ஆகியோர் அடங்கிய போலீஸ் படையினர் குற்றாலம் அலுவலகத்தில் மறைந்து நின்றனர்.

கைது

ராமசுப்பிரமணியன் லஞ்ச பணம் ரூ.10 ஆயிரத்தை சீனிவாசனிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக சீனிவாசனை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அலுவலகம் மற்றும் அவருடைய வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.


Next Story