செயற்கை நூலிழை ஆடை சந்தையை கைப்பற்ற முனைப்பு


செயற்கை நூலிழை ஆடை சந்தையை கைப்பற்ற முனைப்பு
x

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் செயற்கை நூலிழை ஆடைகளை கைப்பற்றும் முனைப்பு காட்டுவதுடன், அடிப்படை கட்டமைப்பை மாற்ற ஆலோசனை மேற்கொண்டனர்.

திருப்பூர்


திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் செயற்கை நூலிழை ஆடைகளை கைப்பற்றும் முனைப்பு காட்டுவதுடன், அடிப்படை கட்டமைப்பை மாற்ற ஆலோசனை மேற்கொண்டனர்.

செயற்கை நூலிழை ஆடைகள்

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இளம் ஏற்றுமதியாளர்கள் துணைக்குழு சார்பாக மாதந்தோறும் காபி வித் எக்ஸ்போர்ட் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டு முதல் நிகழ்ச்சி நேற்று இரவு திருமுருகன்பூண்டியில் உள்ள ஓட்டலில் நடைபெற்றது. இளம் ஏற்றுதியாளர்கள் துணைக்குழு தலைவர் தினேஷ் வரவேற்றார்.

செயற்கை நூலிழை துணி மற்றும் ஆடை தயாரிப்பில் 16 ஆண்டுகள் ஈடுபட்டு அதில் நிபுணத்துவம் பெற்ற டெக்னோ ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான சுனில் ஜூன்ஜூன்வாலா தனது அனுபவங்களை ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, 'நமது அடிப்படை கட்டமைப்பில் மாற்றங்கள் செய்ய வேண்டும். சீனா, தைவான், கொரியா போன்ற நாடுகளில் தயாரிக்கப்படும் செயற்கை நூலிழை துணிகள் மற்றும் ஆடைகளை உலக அளவில் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படுகிறது. திருப்பூரிலும் அதே தரத்துடன் செயற்கை நூலிழை ஆடைகளை தயாரிக்க முடியும். அமெரிக்காவில் இறக்குமதியாகும் செயற்கை நூலிழை ஆடைகளில் 60 சதவீதம் சீனாவில் இருந்து செல்கிறது. நமது முயற்சிகள் சரியாக இருக்கும்பட்சத்தில் அதில் பெரும் பங்கை நாம் கைப்பற்ற முடியும்' என்றார்.

வர்த்தகம் பலமடங்கு உயரும்

சிறப்பு விருந்தினராக இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் பங்கேற்று பேசும்போது, 'செயற்கை நூலிழை ஆடை குறித்து பல்வேறு ஆய்வுகள் செய்து உலக அளவில் அதன் தேவை மற்றும் வாய்ப்புகள் குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது. உற்பத்தி சார்ந்த மானிய திட்டம் (பி.எல்.ஐ.-1) கீழ் அரசு செயற்கை நூலிழை துணிகள் மற்றும் ஆடைகள் உற்பத்திக்காக பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது.

இனி அடுத்து வரும் ஓரிரு மாதங்களில் பி.எல்.ஐ.-2 திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சிறு, குறு உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள். ஆஸ்திரேலியாவுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. கனடா, இங்கிலாந்துடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் சில மாதங்களில் கையெழுத்தாகும் வாய்ப்புள்ளது. இதன்மூலமாக வர்த்தகம் நிச்சயமாக பலமடங்கு உயரும். அதற்கேற்ப நாம் நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.

காலத்தின் தேவை

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் பேசும்போது, 'உலகளாவிய போட்டிகளை எதிர்கொண்டு வலிமையுடன் வர்த்தகத்தில் உயர செயற்கை நூலிழை ஆடை தயாரிப்பில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வது காலத்தின் தேவையாக உள்ளது. இந்த நிகழ்ச்சி நம் உறுப்பினர்களுக்கு பயனளிக்கும்' என்றார். ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் திருக்குமரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். முடிவில் துணைக்குழுவின் துணை தலைவர் சரண்ராஜ் நன்றி கூறினார். இதில் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றார்கள்.



Related Tags :
Next Story