திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்


திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
x

திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார்.

திருப்பத்தூர்

வாணியம்பாடியை அடுத்த கலந்திரா பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைற்றது. தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி தலைமை தாங்கினார். வாணியம்பாடி நகர செயலாளர் வி.எஸ்.சாரதிகுமார், உதயேந்திரம் பேரூர் செயலாளர் ஆ.செல்வராஜ், ஆலங்காயம் பேரூர் தி.மு.க. செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி ஆகியோர் மாநில சுயாட்சி, திராவிட இயக்க வரலாறு என்கிற தலைப்பில் நீதிக்கட்சி வரலாறு, தி.மு.க. வரலாறு, மாநில சுயாட்சி மற்றும் தத்துவம், சமூக நீதி, பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் குறித்தும், தமிழகத்தின் வளர்ச்சியில் தி.மு.க.வின் பங்களிப்பு குறித்தும் விளக்கி பேசினர்.

கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.வி.கிரிராஜ் நன்றி கூறினார்.


Next Story