திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்


திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
x

சேலம் அம்மாபேட்டையில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது.

சேலம்

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளைஞர் அணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேயர் ராமச்சந்திரன், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் அறிவழகன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் கேபிள் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. அயலக அணி மாநில செயலாளர் அப்துல்லா, செய்தி தொடர்பு இணை செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story