திரவுபதி அம்மன் கோவில் பிரமோற்சவ கொடியேற்றம்


திரவுபதி அம்மன் கோவில் பிரமோற்சவ கொடியேற்றம்
x

நெல்லிக்குப்பத்தில் திரவுபதி அம்மன் கோவில் பிரமோற்சவ கொடியேற்றம் நடந்தது.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும், பிரமோற்சவம் நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அர்ஜூனன், திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து பிரமோற்சவம் கொடியேற்றப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் வருகிற மே 25-ந்தேதி இரவு சாமி வீதியுலா தொடங்குகிறது. தொடர்ந்து 28-ந்தேதி காலையில் திருக்கல்யாண உற்சவமும், 31-ந்தேதி மாலை பகா சுரனுக்கு அன்னமிடல் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஜூன் மாதம் 2-ந்தேதி மாலையில் தீ மிதி திருவிழா நடைபெற இருக்கிறது. அதை தொடர்ந்து 3-ந்தேதி மஞ்சள் நீர் விழாவும், 4-ந்தேதி பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story