திரௌபதியம்மன் தீ மிதித் திருவிழா


திரௌபதியம்மன் தீ மிதித் திருவிழா
x

திரௌபதியம்மன் தீ மிதித் திருவிழா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் இராயம்புரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தர்மகர்த்தா பிரச்சனை காரணமாக 8 ஆண்டுகளாக தீமிதி திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு கிராம இளைஞர்கள் ஒருங்கிணைந்து தீமிதி திருவிழா நடத்த முடிவு செய்தனர். அதன்படி கடந்த 1 ஆம் தேதி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் மகாபாரத கதைகளும் அம்மன் அலங்கார வழிபாடுகளும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தீ குண்டம் அருகே திரௌபதி அம்மன் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அமாவாசை அன்று அரவான் கடபலி நடப்பது 22 நாட்கள் மகாபாரத கதைகளும் தீமிதி திருவிழா அன்று கூந்தல் முடிப்பு விழா நடைபெறுவது இந்த ஊர் தீமிதி திருவிழாவின் தனிச் சிறப்பு ஆகும். இந்த திருமதி திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்


Next Story