திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

மேல்மொணவூரில் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வேலூர்

வேலூரை அடுத்த மேல்மொணவூர் ரேணுகாம்பாள் கோவில் வளாகத்தில் உள்ள தருமராஜா சமேத திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக 27-ந் தேதி மாலையில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், பிரவேசபலி, கோ பூஜை, முதல் கால யாக பூஜையுடன் அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, தத்துவார்சனை, பூர்ணாஹூதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அம்மனை மலர்களால் அலங்கரித்து தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு புனித நீர் நிரப்பிய கலசங்களை மங்கள வாத்தியங்கள் மற்றும் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று கோவில் கோபுரம் மீது ஊற்றி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பொதுமக்கள் அனைவருக்கும் கோவில் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை எருக்கன் வீட்டு வகையறாவினர், விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story