வாய்க்கால்கள் தூர்வாரும் பணி


வாய்க்கால்கள் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 17 July 2023 12:45 AM IST (Updated: 17 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே வாய்க்கால்களை தூர்வாரும் பணி நடந்தது.

மயிலாடுதுறை

கொள்ளிடம் அருகே வாய்க்கால்களை தூர்வாரும் பணி நடந்தது.

வாய்க்கால் தூர்வாரும் பணி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பிரதான வாய்க்கால்கள் மற்றும் பாசன கிளை வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்களை தூர்வாரும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கடைமடை பகுதியான கொள்ளிடம் பகுதிக்கு பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் வந்து சேர்வதற்கு முன்பாக வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் நீர்வளத்துறை இணைந்து வாய்க்கால்களை தூர்வாரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கொள்ளிடம் அருகே உள்ள பண்ணங்குடி பாசன வாய்க்கால் மற்றும் கூட்டுமாங்குடி வடிகால் வாய்க்கால் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு தூர்வாரப்படாமல் இருந்து வந்தது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதையடுத்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.அதன்படி பொக்லின் எந்திரம் மூலமாக வாய்க்கால்களை அகலப்படுத்தி தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. 2 வாய்க்கால்கள் உரிய நேரத்தில் தூர்வாரப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த 2 வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டதன் மூலம் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயனடையும் என்று அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story